சிவகங்கை அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மேலவாணியங்குடியில் அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் பதின்ம மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் மாணவர் ஆ. ஸ்ரீராம் 96% பெற்று முதலிடமும், மாணவர் ஆ. கவுசிக் 94% பெற்று இரண்டாமிடமும், மாணவி பா. தங்க அங்ஷயா மாரி 93% பெற்று மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். மாணவர் ரா. ரவிவர்மா கணினி அறிவியல் பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மேலும் ஜே.இ.இ மெயின் நிழைவுத் தேர்வில் எவ்விதமான பயிற்சி வகுப்பிற்கும் செல்லாமல் பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தியதன் மூலமாக மட்டும் தங்களின் சொந்த முயற்சியினால் ஆ. ஸ்ரீராம் 76 மதிப்பெண்கள் பொற்றும் ஆ. கவுசிக் 63 மதிப்பெண்கள் பெற்றும் சாதனை படைத்துள்ளனர். பொதுத்தேர்வில் 500 க்கு மேல் 12 மாணவர்களும், 400க்கு மேல் 25 மாணவர்களும் பெற்றுள்ளனர். இவர்களை பள்ளித் தாளாளர் சே. அசோக்குமார், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். இவ்வாறு அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தைப் பாராட்டி வருகின்றனர்.
No comments:
Post a Comment