காரைக்குடியில் நடைபெற்ற தேசிய அளவிலான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் பரிசு வென்ற மானாமதுரை வீரர்.
சக்கர நாற்காலி கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக பாரா ஸ்போர்ட்ஸ் சென்டரில் மே 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் 'அமர் சேவா அழகப்பர் கோப்பை 2024 க்கான' தேசிய அளவிலான ஆண்களுக்கான ஒரு நாள் சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றது.
இதில் தலைமை விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு ஜி. ரவி அவர்களும், சிறப்பு அழைப்பாளர்களாக அமரர் சேவா சங்க நிறுவனர் மற்றும் தலைவர் பத்மஸ்ரீ திரு எஸ். ராமகிருஷ்ணன், அமரர் சேவா சங்க செயலாளர் திரு எஸ். சங்கரராமன், அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் திரு அ. செந்தில்நாதன், இணைச் செயலாளர் டி.சி.சி.பி.ஐ சக்கர நாற்காலி கிரிக்கெட் யூனிட் தலைவர் பாம்பே திரு டாக்டர் கே முரளி சர்தாபாய் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர்.
மேலும் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு சக்கர நாற்காலி கிரிக்கெட் சங்கத் தலைவர் திரு டி. ராமச்சந்திரன் மற்றும் காரைக்குடி ஏ.யு.சி.பி.இ முதல்வர் திரு கே. முரளிராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவின் முன்னேற்பாடுகளை அழகப்பா பல்கலைக்கழக பாரா ஸ்போர்ட்ஸ் சென்டர் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் திருமதி டி. ராஜலஷ்மி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே. சுந்தர் ஆகியோர் மேற்கொண்டனர்.
தேசிய அளவில் நடைபெற்ற இச்சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த வீரர் திரு அஜய் சிங்கம் மூன்றாம் பரிசுக் கோப்பையை தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடந்து முடிந்த இப்போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பங்கேற்றனர். போட்டியின் இறுதி நாளான 21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று பிரிவு விழா நடைபெற்ற முடிந்தது.
No comments:
Post a Comment