சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடுமையான வெயில் கொளுத்தி வரும் நிலையில் பெரியார் சிலை சிக்னலில் கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட்டு செல்லும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி விசாலம் சிட்பண்ட் லிமிடெட்,சொர்ணவல்லி சமூக சேவை அறக்கட்டளை இணைந்து போக்குவரத்து காவல்துறையின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்போடு பசுமை பந்தல் அமைக்கப்பட்டது., ஒரு வார காலமாக இந்தப் பந்தல் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இரவு நேரத்தில் மட்டுமே வேலை செய்ய முடிந்த நிலையில் இன்று வேலையும் முழுவதுமாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது., இந்நிகழ்வில் காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், போக்குவரத்து ஆய்வாளர் முத்துராமலிங்கம், சொர்ண லட்சுமி சமூக சேவை அறக்கட்டளை பொறுப்பாளர்கள், விசாலம் சிட்பண்ட் நிறுவன பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்., பசுமை பந்தலை திறந்து வைத்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கூறுகையில் இதுபோன்ற சமூக நல பணிகளில் தன்னையும் நினைத்துக் கொண்டு உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்., மேலும் இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு வளர்ப்பு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு இவற்றை உங்கள் வீடுகளில் அல்லது பொது இடங்களில் வைத்து வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு பராமரித்து பயன்பெற வேண்டும் என மரக்கன்றுகளை வழங்கிய சமூக ஆர்வலர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
[5/21, 9:32 PM] Jai Sivagangai Dist Kural Reporter: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜீவா நகர் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் ஆட்டுக்குட்டி ஒன்று தவறி விழுந்து விட்டதாக அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நிலைய அலுவலர் போக்குவரத்து ராமச்சந்திரன் தலைமையில் முன்னணி தீயணைப்போர் பாண்டியராஜன்,செல்வ,பாண்டியன்,கார்த்திகேயன்,காளீஸ்வரன், கோபு ஆகிய தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய ஆட்டுக்குட்டியை கயிறு மூலம் கட்டி இழுத்து கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment