மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 10 May 2024

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி

 


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பாபா மெட்ரிக் பள்ளியில் 2023 - 2024 கல்வியாண்டில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் 100% தொடர்ச்சியாக தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர் கே. கடோத் கஜன் 500 க்கு 489 பெற்று பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். ஆர். துர்க்கா ஶ்ரீ மற்றும் எஸ். செளம்யா ஆகிய மாணவிகள் முறையே 500 க்கு தலா 487 பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். மாணவர் எஸ். சுரேந்தர் 479 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார். மேலும் கணிதப் பாடத்தில் 4 மாணவர்கள் 100% எடுத்துள்ளனர். நடந்து முடிந்த இத்தேர்வில் 17 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

கூடுதலாக பாடவாரியாக 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு, தமிழ் பாடத்தில் 7 மாணவர்களும், ஆங்கிலமத்தில் 9 மாணவர்களும், கணிதத்தில் 10 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 8 மாணவர்களும் மற்றும் சமூக அறிவியலில் 11 மாணவர்களும் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிறுவனர் அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் பரிசுகள் வழங்கினார். பள்ளியின் தாளாளர் திரு ஆர். கபிலன், பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி, பள்ளியின் முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் ஆசிரியர்கள் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் பொன்னாடை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad