அடுத்ததாக இளையான்குடி வட்டம் நெடுங்குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 11 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் புதிய பள்ளி வகுப்பறை கட்டிடத்தையும், இளையான்குடி வட்டம் முனைவென்றி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூபாய் 7 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக புதிய கலையரங்க கட்டிடத்தையும், தொடர்ச்சியாக இளையான்குடி வட்டம் அரண்மனைக்கரை ஊராட்சியில் ரூபாய் 14 இலட்சம் மதிப்பீட்டில் உணவு தானிய கிடங்கு மற்றும் பொது விநியோக கடை உள்ளிட்ட கட்டிடத்தையும், அதேபோல் இளையான்குடி வட்டம் கலங்கநாதன்கோட்டை ஊராட்சியில் ரூபாய் 41 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கிராம வாரச்சந்தை மற்றும் கட்டனுர் ஊராட்சியில் ரூபாய் 23.50 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், பள்ளி தலைமை ஆசிரியர், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், ஒன்றிய குழு தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் சுதா கண்ணன், வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர் செழியன், மாவட்ட பிரதிநிதி அய்யாசாமி, ராஜபாண்டி, கண்ணன், அவைத்தலைவர் மலைமேகு, விவசாய அணி நிர்வாகி காளிமுத்து, கழக முன்னோடிகளும், ஆசிரியர் பெருமக்களும், பொதுமக்களும் மற்றும் மாணவச் செல்வங்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment