கானாடுகாத்தானில் குளியல் தண்ணீர் தொட்டி மற்றும் போர்வெல் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 18 January 2024

கானாடுகாத்தானில் குளியல் தண்ணீர் தொட்டி மற்றும் போர்வெல் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த பாராளுமன்ற உறுப்பினர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 1 வது வார்டு அப்பர் தெரு நேமத்தான்பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2022 - 2023 கீழ் கட்டப்பட்ட குளிக்கும் தண்ணீர் தொட்டி மற்றும் போர்வெல் ஆகியவற்றை சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு கார்த்தி ப. சிதம்பரம் திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் பேரூராட்சி தலைவர் ராதிகா ராமச்சந்திரன், துணைத்தலைவர் சோலைராஜன், வார்டு உருப்பினர் கற்பகம் மாரியப்பன் மற்றும் கருப்பையா, நேமத்தான்பட்டி நகர தலைவர் சாமியாடி சோமன், கொத்தமங்கலம் பி. எல். காந்தி, திருமயம் வட்டார காங்கிரஸ் தலைவர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ்பிரபு, பேரூராட்சி அலுவலர்கள் செல்லையா மற்றும் கண்ணன், ஒப்பந்ததாரர் சொ. முத்துராமலிங்கம், கட்டிட மேஸ்த்திரி பூமிநாதன், 1 வது வார்டு பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனார்.

No comments:

Post a Comment

Post Top Ad