சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள பெமினா நகரில் ஏற்கனவே பைப்பாஸ் சர்வீஸ் ரோட்டின் அருகே குடிநீர் வழங்க பைப் லைன் போடுவதற்காக நெடுஞ்சாலை கல்வெட் பாலத்தின் தூம்பை ஒட்டி தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மணல்மேடு காரணமாக இலகுவாக மழைநீர் செல்ல முற்றிலும் தடை ஏற்பட்டதால் மழைநீரானது நகர் பகுதிகளில் உள்ள வீடுகளை சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, "இதுசம்பந்தமாக ஏற்கனவே நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது, அம்மனு மீதான நடவடிக்கையாக நகராட்சி துறையினர் மாற்றுவழி ஏற்பாடுகள் ஏதும் செய்துதராமல் அலட்சியம் செய்கின்றனர், மேலும் தாங்கள் வசிக்கும் வீடுகளை மழைநீர் பல நாட்களாக தேங்கி சூழ்ந்துள்ளதன் காரணமாக இரவு நேரங்களில் விஷ பூச்சிகளால் ஆபத்தும், நோய் தொற்று அபாயம் ஏற்படுள்ளதாக வேதனை தெரிவித்தனர்".
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு தெப்பம்போல் தேங்கியுள்ள மழைநீரை கல்வெட் தூம்பின் வழியாக விழுந்து ஓடுவதற்கு வழிவகை செய்துதர தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment