சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடி வட்டாரத்தில் மீனாப்பூர் கிராமத்தில் வேளாண்மை துறையில் அட்மா திட்டத்தின் கீழ் நெல் வயலில் பண்ணை பள்ளி நடத்தப்பட்டது.இதற்கு அப்பகுதி வேளாண் அலுவலர் செல்வி.அபர்ணா தலைமை தாங்கினார். இந்த பயிற்சிக்கு வருகை தந்திருந்த திரு.சேவுகன் செட்டி அவர்கள் விவசாயிகளுக்கு இப்பருவத்தில் ஏற்படும் நோய்கள் மற்றும் பூச்சி தாக்குதல் பற்றியும் அவற்றை கட்டுபடுத்தும் முறைகள் மேலும் நுண்ணூட்ட தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
இப்பயிற்சியில் அப்பகுதி உதவி வேளாண் அலுவலர் திரு.வீரராகவன் மற்றும் பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு.சதீஸ் மற்றும் செல்வி.லட்சுமி பாரதி ஆகியோர் இப்பயிற்சியினை ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment