அதனை தொடர்ந்து கற்பிணிகளுக்கு தாம்பூலம் வழங்கி, பின் அனைவருக்கும் உணவுகளை பரிமாறினார். இந்நிகழ்ச்சியில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட கற்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் திருப்புவனம் பேரூராட்சி மன்ற தலைவர் த. சேங்கைமாறன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜாமணி, ஒன்றிய குழு பெருந்தலைவர் திருமதி லதா அண்ணாதுரை, ஒன்றிய குழு துணை தலைவர் திரு முத்துச்சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மலைச்சாமி, திருமதி ராதா சிவச்சந்திரன, திருப்புவனம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா கான், திருப்புவனம் ஒன்றிய கவுன்சிலர்கள் லாடனேந்தல் சுப்பையா, மடப்புரம் மகேந்திரன், சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment