மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவு பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் நோய் தொற்று பரவும் நிலை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 July 2023

மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதி போதுமான அளவு பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் நோய் தொற்று பரவும் நிலை.

சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கான கழிப்பறை வசதி போதுமான அளவு பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் நோய் தொற்று கிருமிகள் பரவும் அபாய நிலையில் உள்ளது. இதனைப் பற்றி பள்ளி மாணவர்களிடம் விபரம் கேட்ட போது அவர்கள் கூறுகையில், பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பள்ளி பயிலும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். 


மேலும் பள்ளியில் இரண்டு மூன்று இடங்களில் கழிப்பறை இருக்கின்றது ஆனால் போதுமான அளவு சரியான பராமரிப்பு இல்லாமலும், உடனுக்குடன் சுத்தம் செய்யாமலும் இருக்கிறது என்றும், மிக முக்கியமாக கழிப்பறைகளில் தண்ணீர் வசதி இல்லை என்றும் கூறுகின்றனர். அதேபோல் பள்ளி மாணவர்கள் பள்ளி மைதானத்தில் விளையாட்டுகளில் ஈடுபட்டு விட்டு காலணி இல்லாமல் கழிவறைக்குள் சென்று வருவதால் எண்ணிலடங்கா நோய்
தொற்று கிருமிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மற்றும் சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்பட வாய்ப்புள்ளது. 


கூடுதல் தகவலாக 2011- 12 ஆம் கல்வியாண்டில் கூடுதல் கழிவறை வசதி ஏற்படுத்த ரூபாய் 1.8 லட்சம் திட்ட மதிப்பீட்டு செலவில் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டது. பின்னர் அதை சரிவர பராமரிக்காத நிலையில் இப்பொழுது படத்தில் காணப்பட்டுள்ள நிலைமையில் தற்போது உள்ளது. கூடுதலாக பராமரிப்பு இல்லாத அந்த ஆண்கள் கருப்பறைக்கு நேர் எதிராக ஆசிரியர்களின் கழிவறை உள்ளது, இந்த கழிவறையை மட்டும் தினந்தோறும் சுத்தம் செய்யப்படுவதாக தங்களின் வேதனையை பகிர்ந்து கொண்டனர் பள்ளி மாணவர்கள். பள்ளி மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் பள்ளி கழிவறையை தாமதமின்றி பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் சார்பாகவும் நமது தமிழக குறள் சார்பாகவும் நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad