அன்னவாசல் ஊராட்சியில் அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 19 May 2023

அன்னவாசல் ஊராட்சியில் அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியம், அன்னவாசல் ஊராட்சியில் அரசு சார்பாக 'மக்கள் தொடர்பு முகாம்' மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதனன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் திரு கார்த்திக் பா.சிதம்பரம் அவர்களும், மாண்புமிகு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசிரவிக்குமார் அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்கள். 

இந்நிகழ்வில் பயனாளிகள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களும், கோட்டாட்சியர் அவர்களும், ஊரக வளர்ச்சி முகமை, ஒன்றிய குழு பெருந்தலைவர் அவர்களும், ஒன்றிய குழு துணை தலைவர் அவர்களும், வட்டாட்சியர் அவர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும், ஊராட்சி மன்ற தலைவர் அவர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். 


முகாமிற்கு மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் என்று ஒன்றாக இணைந்து நலத்திட்ட உதவிகள் வழங்குவதை ஊர் மக்கள் சார்பாக தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.


- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad