தமிழ்நாடு வாணிபக் கழகத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வரும் மதுபான பெட்டிகள் சுமை இருக்கும் தொழிலாளருக்கு கூலி உயர்வு கேட்டு ஏ ஐ டி யு சி தொழிற்சங்கத்தின் சார்பாக பல ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் மதுபான பெட்டிகளை கடைகளுக்கு கொண்டு செல்லும் கரூரை சேர்ந்த தனியார் ஒப்பந்தக்காரர் 11 ஆண்டுகளாக எவ்வித கூலி உயர்வு இல்லாமலும் அதனை கொடுக்க மறுத்தும் தொழிலாளர் வைப்பு நிதிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவது சம்பந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சியர் மண்டல மேலாளர் மற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் கோரிக்கைவிடுத்தும் எவ்வித பயனும் இல்லாத காரணத்தால் பல்வேறு கட்டங்களில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாத காரணத்தால் இன்று ஏ ஐ டி யூ சி மதுபான பெட்டிகள் சுமை இருக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட வாணிபக் கழகத்திலிருந்து மதுபானங்களை ஏற்றாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
டென்டரை ரத்து செய்ய வலியுறுத்தியும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக வாயில் முன்பாக அமர்ந்து தொழிற்சங்கத்தின் சார்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்று வருகிறது

No comments:
Post a Comment