ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். இதை கண்டித்து மாவட்ட முழுவதும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 7 April 2023

ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். இதை கண்டித்து மாவட்ட முழுவதும் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


ராகுல்காந்தி பொதுகூட்டத்தில் பேசியபோது மோடி சமூகத்தை சார்ந்தவர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது அதைத் தொடர்ந்து அவர் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.

இதனையடுத்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப சத்தியமூர்த்தி அவர்கள் இன்று மானாமதுரை காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பி ஜே பி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து பத்திரிகையின் வாயிலாக பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல சந்திப்பு நடைபெற்றது.


இந்த சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் ஏப்ரல் மாதம் தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் போரட்டங்கள் தகுதி நீக்கம் செய்த ஒன்றிய பி ஜே பி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து நடைபெறும் எனதெரிவித்தார்.


இந்நிகழவில் மாநில SC STதுறை துணைத்தலைவர் டாக்டர் S.செல்வராஜ் அவர்களும் மாவட்ட பொருளாளர் SM.பழனியப்பன் அவர்களும் மானாமதுரை நகர் காங்கிரஸ் தலைவர் M.கணேசன் அவர்களும் மானாமதுரை மேற்கு வட்டார தலைவர் கரு.கணேசன் அவர்களும் இளையங்குடி வட்டாரத் தலைவர் O. மலைச்சாமி அவர்களும் மானாமதுரை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் K. சோனைராஜ் அவர்களும் மானாமதுரை நகர் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் G.பழனிவேல் ராஜன் அவர்களும் சிவகங்கை மாவட்ட INLRF முத்து கருப்பன் அவர்களும் சிவகங்கை மாவட்ட இணை செயலாளர் T.தங்கச்சாமி அவர்களும் நகர் காங்கிரஸ் துணைத் தலைவர் B. முத்துக்குமார் அவர்களும் நகர் சிறுபான்மை பிரிவு தலைவர் V. ஆரோக்கியசாமி முன்னாள் நகர் காங்கிரஸ் தலைவர் K.ராமு ஆ. சாமிநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் முத்து ராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad