காரைக்குடி நகராட்சி விரைவில் மாநகராட்சி அந்தஸ்து பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 23 April 2023

காரைக்குடி நகராட்சி விரைவில் மாநகராட்சி அந்தஸ்து பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


காரைக்குடியை மாநகராட்சி ஆக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விரைவில் அந்நகரம் மாநகராட்சி அந்தஸ்து பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

1928 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது காரைக்குடி நகராட்சியாக உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின்னர் தேர்வுநிலை நகராட்சியாகவும் தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் காரைக்குடி உயர்ந்து உள்ளது .காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கும் நிலையில் அங்கு ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் நகராட்சியின் ஆண்டு வருமானம் 50 கோடிக்கு மேல் உள்ளது என்றும் போக்குவரத்து கழகம் பிஎஸ்என்எல் ஆவின் ஆகியவற்றின் முக்கிய அலுவலகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 


இந்த நிலையில் காரைக்குடியை மாநகராட்சி ஆக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளார் நிலையில் விரைவில் காரைக்குடி மாநகராட்சி ஆக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .காரைக்குடி திருவண்ணாமலை ராமநாதபுரம் புதுக்கோட்டை நாமக்கல் ஆகிய நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு சட்ட சபையில் அறிவித்துள்ளார். செய்தியாளர் முத்துராஜன் 

No comments:

Post a Comment

Post Top Ad