சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழச்சீவல்பட்டியில் திருப்பத்தூர் வட்டார காங்கிரஸ் மற்றும் கீழசீவல்பட்டி நகர் காங்கிரஸ் சார்பாக தலைவர் ராகுல் காந்தி அவர்களின் MP பதவியை ரத்து செய்த மத்திய BJP அரசை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாண்புமிகு திரு ப.சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து முழக்கத்துடன் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் பதிவு செய்தனர்.

ஏற்கனவே மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற நிலையில் நாள்தோறும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் என காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசை வன்மையாக எதிர்த்து வருகின்றது நாடு முழுவதும் மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
- செய்தியாளர் ஜே.கெ. லிவிங்ஸ்டன்
No comments:
Post a Comment