சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் மாநில ஆண்கள் சீனியர் கபடி போட்டிக்கான திறனாய்வுத் தேர்வு மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வீரர் வீராங்கனைகள் தங்களின் சிறப்பான விளையாட்டின் மூலமாக திறமையை வெளிப்படுத்தினார்கள். மேலும் தமிழக கபடி அணி சார்பாக ஏற்கனவே விளையாடிய வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் பல ஊர்களைப் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன.

வீரர்களுக்கு வெயில் மற்றும் மழை போன்ற எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உள்ள விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மேலும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு துறை நிர்வாகிகளான செயலாளர், பொருளாளர், தலைவர், செலக்சன் கமிட்டி நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள், காவல் துறையினர் முன்னிலையில் இப்போட்டிகள் நடைபெற்றன.
சிறப்பாக விளையாடி அணிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பை பெறும் அணியினர் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி விளையாடுவதர்க்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment