அதில், விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல் சாகுபடியினை, முறையாக சேமித்து வைத்து பயன்பெறும் வகையிலும், காலத்திறகேற்றவாறு, அதிக இலாபம் ஈட்டும் வகையிலும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், நவீன சேமிப்புத்தளங்கள் உள்ள கிட்டங்கிகள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு, விவசாயிகளின் நலன் காக்கின்ற அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது.

மேலும், விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் நெல் கொள்முதல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு, பணியாளர்களின் தேவை மற்றும் அவசியம் கருதி, மாவட்ட முழுவதும் பருவகால பணியாளர்களை நியமிப்பதற்கென நடவடிக்கைகள் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், நெல் கொள்முதலுக்கான 61 பருவகால பட்டியல் எழுத்தர்கள், 53 பருவகால உதவுபவர்கள் மற்றும் 58 பருவகால காவலர்கள் என மொத்தம் 172 நெல் கொள்முதலுக்கான பருவகால பணியாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது.
பணி நியமன ஆணைகளை, பெற்றுள்ள அந்தந்த நிலையைச் சார்ந்த பணியாளர்கள் தங்களுக்கான பணியினை முறையாகவும், சிறப்பாகவும் மேற்கொள்வதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்றத் துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment