அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பாரம்பரிய மிக்க அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு விழா மாணவர்களின் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகும் என்றும் இந்நாளில் நீங்கள் பட்டம் பெற முதல் காரணமாக இருந்த உங்கள் பெற்றோரின் தியாகத்தை நன்றியோடு நினைவு கூற வேண்டும் அதுபோல உங்கள் ஆசிரியர்களையும் நீங்கள் மறக்கக்கூடாது என்றும் வள்ளல் அழகப்பரின் அரும் முயற்சியால் உருவான இக்கல்லூரியால் லட்சக்கணக்கான பட்டதாரிகள் உருவாகி இன்று அவர்கள் உலகம் முழுவதும் பணி புரிகின்றார்கள் ஆகையால் இந்நாளில் வள்ளல் அழகப்பரையும் நீங்கள் நினைவு கூற வேண்டும் என்றும் பட்டதாரி என்று சொல்வதற்கு தகுதியானவர்களாக நீங்கள் கல்லூரிக்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயனுள்ள வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் உயர் கல்வியில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடம் வகிப்பதோடு, உயர்கல்வி நிறுவனங்களிலன் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

இந்தியாவில் ஏறத்தாழ 50,000 கல்லூரிகள் இருக்கும் நிலையில் அவற்றில் தரவரிசையில் 54வது இடத்தில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி இருப்பதால் அதை எண்ணி மாணவர்கள் பெருமைப்பட வேண்டும் என்றும் தமிழ் கலாச்சாரத்தை உலகமே வியந்து பார்க்கிறது என்றும் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்வதே கல்வி என்றும் அத்தகைய சீரிய பணியை இன்று பட்டம் பெறும் நீங்கள் செய்ய வேண்டும் என்றும் அதற்கு பட்டதாரிகளான நீங்கள் பாடப் புத்தகங்களை தாண்டி பயனுள்ள புத்தகங்களை படித்து சாதனையாளராக ஆக வேண்டும் என்றும் பல்வேறு திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது பட்டமளிப்பு விழா பேருரையில் குறிப்பிட்டார்.
விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த 73வது பட்டமளிப்பு விழாவில் 2019-2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற 903 இளநிலை மாணவர்களும்,205 முதுநிலை மாணவர்களும் 04 ஆய்வியல் நிறைஞர்களும் என மொத்தம் 1112 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 68 மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment