கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 61 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.38.36 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்: - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 April 2023

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 61 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.38.36 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்:


கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், முதலமைச்சராக இருந்த பொழுதுதான் முதன்முதலாக மாற்றுத் திறனாளிகளுக்கு தனித்துறை ஒதுக்கீடு செய்து அந்தத் துறையினுடைய பணிகளை தன் பொறுப்பில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி, இத்துறையை பெருமைப்படுத்திய தலைவராவார். 

அவ்வழியில், தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர், போலவே, இத்துறையை தன்வசம் வைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களின் மறுவாழ்விற்கென எண்ணற்ற திட்டங்களை வழங்கி, அவர்களின் நலன் காத்து வருகிறார்கள். 


அதுமட்டுமன்றி, மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டு வருவதுடன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைத் திட்டம், பராமரிப்பு நிதியுதவித் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்றத் திட்டங்களால் மாற்றுத் திறனாளிகளை பயன்பெறச் செய்யும் வகையில் தமிழகத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கெனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், சிவகங்கை மாவட்டத்தில், 2022-2023-ஆம் ஆண்டில் மொத்தம் 22,728 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


அதில், 2,688 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய தேசிய அடையாள அட்டைகளும் மற்றும் 05 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் ரூ.2,000 வழங்கும் திட்டத்தின் கீழ், 3240 மாற்றுத் திறனாளிகள் பயனடைந்த நிலையில், 468 மாற்றத் திறனாளிகளுக்கு கூடுதலாக ஒதுக்கீடு பெறப்பட்டு, ரூ.8.46 இலட்சம் உதவித்தொகை பெற்று வழங்கப்பட்டுள்ளது.

 

கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகையாக 351 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15.32 இலட்சமும், அரசு நிதியுதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான செயல்படுத்தப்படும் 07 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மான்யம் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.48.81 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளது.  மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மொத்தம் 722 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.75 கோடி மதிப்பீட்டில் உதவி உபகரணங்களும், மாற்றுத் திறனாளிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில், 269 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் வங்கிக்கடன் உதவிகளும் வழங்கப்பட்டு, இதுபோன்று பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.13.58 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் 2022-2023-ஆம் நிதியாண்டிற்கென வழங்கப்பட்டுள்ளது. 


சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக திகழ்ந்திடும் வகையிலும், அவர்களை போற்றிடும் வகையிலும், அவர்கள் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிறரைச் சார்ந்திருக்காமல் தன்சார்பு நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவும்  தமிழ்நாடு முதலமைச்சர், மாற்றுத்திறனாளிகள் மீது தனிகவனம் செலுத்தி, அவர்களுக்கான சிறப்பு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி அவர்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். அத்திட்டங்கள் மூலம் பயன்பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களது வாழ்க்கைக்கு பயனுள்ள வகையில் அதனை பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.


இன்றையதினம் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23,38,000 மதிப்பீட்டிலான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 06 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,33,000 மதிப்பீட்டிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 07 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6,99,993 மதிப்பீட்டிலான பாட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.57,500 மதிப்பீட்டிலான தக்க செயலிகளுடன் கூடிய திறன்பேசிகளையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39,500 மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலிகளும் என மொத்தம் 61 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38,36,393 மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு வகையான உதவி உபகரணங்களும் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும்  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள்  மஞ்சுளா பாலசந்தர் (சிவகங்கை),  லதா அண்ணாத்துரை (மானாமதுரை), சிவகங்கை நகர்மன்றத் தலைவர் சி.எம்.துரைஆனந்த், நகர்மன்றத் துணைத் தலைவர் கார்கண்ணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முனைவர் து.கதிர்வேலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செந்தில்குமார் மற்றும் த ஆரோக்கிய சாந்தாராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad