சிவகங்கையில், மக்கள் குறைதீர்க்கும் நாள், அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் வழங்கினார். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 20 March 2023

சிவகங்கையில், மக்கள் குறைதீர்க்கும் நாள், அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் வழங்கினார்.


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ.14.65 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும் மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன் வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 413 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், அறிவுறுத்தினார்.



இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இளையான்குடி வட்டத்தைச் சார்ந்த 05 பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 03 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,0500 வீதம் மொத்தம் ரூ.27,150 மதிப்பீட்டிலான மூன்று சக்கர சைக்கிள்களையும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,840 வீதம் மொத்தம் ரூ.34,200 மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களையும், 02 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,835 வீதம் மொத்தம் ரூ.3,670 மதிப்பீட்டிலான ப்ரெய்லி கை கடிகாரங்களும், 05 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.11,500  வீதம் மொத்தம் ரூ.57,500 மதிப்பீட்டிலான தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,840 மதிப்பீட்டிலான காதொலிக் கருவியும் என 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,25,360  மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களும், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியங்களின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.5,00,000 மதிப்பீட்டிலான விபத்து மரண நிவாரணத் தொகைக்கான ஆணையினையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 02 பயனாளிகளுக்கு ரூ.7,40,000 மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணைகளையும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும் திட்டத்தின் கீழ் 01 பயனாளிக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலான மானியத் தொகைக்கான ஆணையினையும் என மொத்தம் 25 பயனாளிகளுக்கு ரூ.14,65,360 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன்  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) ச.ரத்தினவேல், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ)  பி.சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர்  க.நஜிமுன்னிசா உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad