டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு, நிவாரணம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 March 2023

டாஸ்மாக் பணியாளர் குடும்பத்துக்கு, நிவாரணம்.


தமிழ்நாடு முதலமைச்சர், டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜூனன், குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையினை, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறினார்.


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், காரைக்குளம் ஊராட்சி, இண்டங்குளம் கிராமத்தைச் சார்ந்த டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜூனன்  குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதித்தொகை ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையினை,   கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சித்தலைவர்      ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  ஆ.தமிழரசிரவிக்குமார்  முன்னிலையில், நேரில் சென்று வழங்கி, ஆறுதல் கூறி தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டம், பள்ளத்தூரில் கடந்த 03.03.2023 அன்று நிகழ்ந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர் அர்ஜூனன், தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  

தமிழ்நாடு முதலமைச்சர், அர்ஜூனன், குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கிடவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உத்தரவிட்டார்.      


அதன்படி,  தமிழ்நாடு முதலமைச்சர், அர்ஜூனன், குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலை , (அர்ஜூனன், குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு, ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர், அறிவிப்பின்படி, அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கிடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என,  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்  தெரிவித்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad