அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவிகளுக்கான மகளிர் கிரிக்கெட் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் இரண்டாம் இடத்தை பெற்றனர்.
இந்த மகளிர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரி மாணவிகளுக்காக கமுதி பசும்பொன் திரு முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த மகளிர் கிரிக்கெட் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவிகள் சிறப்பாக விளையாடி இரண்டாம் பரிசை பெற்றனர்.
குறிப்பாக அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் நாகராஜி என்ற மாணவி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளை கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தா லெட்சுமி மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் அசோக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

No comments:
Post a Comment