இளையான்குடியில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 January 2023

இளையான்குடியில் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா.


அதிமுக சார்பில் நகரச்செயலாளர் நாகூர் மீரா தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 12 அடி உயர திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 


அதிமுக கழக மூத்த உறுப்பினரும் மாவட்ட எம் ஜி ஆர் மன்ற துணைத் தலைவருமான எம். எஸ். எம் அப்துல் குலாம், அதிமுக கழக கொடியினை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். 


மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவோம் என்றும் தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மானாமதுரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், இளையான் குடிஒன்றிய செயலாளர்கள் கோபி, பாரதிராஜன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad