திமுகவினர் காளி கோயிலில் வந்து சத்தியம் செய்வார்களா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 December 2022

திமுகவினர் காளி கோயிலில் வந்து சத்தியம் செய்வார்களா அதிமுக முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன்.


தி. மு. க., வை சேர்ந்த அமைச்சர்கள் ஒருவராவது ஊழலே செய்யவில்லை என கொல்லங்குடி காளிகோயிலில் சத்தியம் செய்ய வருவார்களா, என சிவகங்கை ஆர்ப்பாட்டத்தில் அ. தி. மு. க., முன்னாள் அமைச்சர் ஜி. பாஸ்கரன் பேசினார்.


அவர் பேசியதாவது: தமிழக அமைச்சர்கள் நாங்கள் ஊழலே செய்யவில்லை என கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் வந்து சத்தியம் செய்வார்களா. தி. மு. க., ஆட்சியில் உள்ள நகராட்சி தலைவர் முதல் அமைச்சர்கள் வரை சத்தியம் செய்வார்களா. சொல்ல முடியாது; சத்தியம் செய்தாலும் செய்வார்கள். ஏனென்றால் தி. மு. க., வினர் தான் ஹிந்து மதத்தை புண்படுத்துபவர்கள்.


சுவாமி இல்லை என்பார்கள்.ஆனால் பின்னாலேயே மனைவி, மருமகன்களை கோயில் கோயிலாக அனுப்பி சுவாமி கும்பிட்டு சிறப்பு பூஜை நடத்துகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் இன்று ஸ்டாலின், மகன் உதயநிதியை அமைச்சராக்க போகிறார். எப்படி இருக்கும் தமிழக அரசின் நிர்வாகம். இவ்வாறு பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை அ. தி. மு. க., எம். எல். ஏ., செந்தில்நாதன் பேசியதாவது: எதிர்க்கட்சியாக இருந்தபோது முதல்வர் ஸ்டாலின் பால், மின் கட்டணத்தை உயர்த்தாதீர்கள் என அவரது வீட்டிற்கு முன் போராடினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் பால், மின் கட்டண உயர்வு செய்துள்ளனர்.கோவை குண்டுவெடிப்பு வழக்கின் முதற்கட்ட விசாரணையில் போலீசார் காரில் காஸ் சிலிண்டர் வெடித்ததாக தெரிவித்தனர். அ. தி. மு. க., பொது செயலாளர் பழனிசாமி, பா. ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். 


அன்றைய தினமே வழக்கை என். ஐ. ஏ., விடம் ஒப்படைத்தனர். இதுபோன்று தமிழகத்தில் தி. மு. க., ஆட்சியில் எண்ணற்ற குற்றங்கள் நடக்கும். 

No comments:

Post a Comment

Post Top Ad