சிவகங்கை மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 13 December 2022

சிவகங்கை மாவட்டத்தில், வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


சிவகங்கை மாவட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்து,  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், ஆகியப்பகுதிகளில் துறை சார்ந்து, மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் தொடர்பாக,  மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி  தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


தமிழ்நாடு முதலமைச்சர், தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேம்பாட்டு வளர்ச்சிக்கான பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளை கண்காணிப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களை தமிழ்நாடு முதலமைச்சர், நியமித்துள்ளார்கள். 


அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் ஆர்.லால்வேனா, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்துப்பணிகள் தொடர்பாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.  


அதன்படி, இன்றையதினம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். 


அதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், திருப்புவனம் அரசு மருத்துவமனை மற்றும் பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவைகளில் புற நோயாளிகள் பிரிவு, தாய் சேய் நலப்பிரிவு, மருந்தகம், மருந்துகளின் இருப்பு மற்றும் பராமரிப்புப் பதிவேடு, தேவையான மருந்துகளின் எண்ணிக்கை மற்றும் ஊசிபோடும் அறை ஆகியவைகளில் பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொண்டும் மற்றும் கலுங்குப்பட்டியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துப் பெட்டகங்கள் மற்றும் இயல்முறை சிகிச்சைகள் தொடர்பாக பயனாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று, சிகிச்சை அளிக்கப்படும் விதம் மற்றும் முறைகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.


அதனைத்தொடர்ந்து, அரசனூர் சமத்துவபுரத்தில் ரூ.85.52 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புப் பணிகள் தொடர்பாகவும், அப்பகுதியில் நியாயவிலைக் கடையில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலை ஆகியன குறித்தும், செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டும், பின்னர், காளையார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தின் செயல்பாடுகள் மற்றும் பிரிவுகள் வாரியாக பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், உங்கள் தொகுதியின் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு வரும் மனுக்களின் நிலைகள், வட்ட வழங்கல் அலுவலகத்தின் சார்பில், பொதுமக்களிடமிருந்து புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வேண்டி பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை மற்றும் நிலை ஆகியன தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.


அதனைத்தொடர்ந்து, தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம், வீரை ஊராட்சி, கைக்குடி நடுநிலைப்பள்ளியில் ரூ.4.96 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமையல் அறைக்கூடம் மற்றும் ரூ.17.32 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடம், வேளாண்மைத்துறையின் சார்பில், தேவகோட்டை வட்டாரத்திற்குட்பட்ட வெண்ணியூர் மற்றும் கிளாங்காட்டூர் ஆகியப்பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நெல்பயிர் சாகுபடி நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டும்,


பின்னர், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், அனுமந்தக்குடி ஊராட்சியில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாயவிலைக்கடையினை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் தரம் மற்றும் இருப்பு நிலை ஆகியன குறித்தும், செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கேட்டறிந்தார், கண்ணங்குடி கிராமத்தில் ரூ.7.36 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கதிரடிக்கும் களம் பணியினையும், கண்டியூர் ஊராட்சி, வலையன்வயல், கீழக்குடியிருப்பில் ரூ.4.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.


மேற்கண்ட ஆய்வுகளின் போது, சம்பந்தப்பட்ட துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பணிகளை தரமான முறையில், விரைந்து முடிக்கப்பெற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை ஆணையாளர் திரு.ஆர்.லால்வேனா,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.இரா.சிவராமன், இணை இயக்குநர் திரு.தனபால் (வேளாண்மைத்துறை), ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் திருமதி வெண்ணிலா, வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad