வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 12 November 2022

வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட  ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக  மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தனேந்தல் மற்றும் கல்குறிச்சி ஆகிய ஊராட்சிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற செய்வது மட்டுமன்றி, மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும், வளர்ச்சிப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறப்பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்துப்பட்டு வருகிறது. 

மானமதுரை ஒன்றியம் முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் 15வது நிதிக்குழுவின் மூலம் ரூ.50,00,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வட்டார பொது சுகாதார ஆய்வக பணிகளை மேற்பார்வையிட்டு மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டத்தையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.48 இலட்சம் மதிப்பீட்டில் வாராச்சந்தை விற்பனைக்கூடாரம் அமைத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில்  மானமதுரை ஒன்றியம் கல்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி மன்றம்,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ.16.46 இலட்சம் மதிப்பீட்டில் பால் உற்பத்தி சங்க கட்டிடம், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து,  திட்டத்தின் கீழ்  ரூ.3.95 கோடி மதிப்பீட்டில் மானாமதுரையில் புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர், சம்மமந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கரபரமேஸ்வரி ரஜினி தேவி மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad