தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்கடன் - மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 13 November 2022

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்கடன் - மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.

மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் உரம் விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவதனை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் ஆகிய ஒன்றியங்களில் ஆகிய ஊராட்சிகளில் கூட்டுறவு சங்கங்களில் உரம் விநியோகம் மற்றும் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்குவதனை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,


சிவகங்கை மாவட்டத்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெற செய்வது மட்டுமன்றி, மாவட்டத்தில் விவசாயத்திற்கு தனிகவனம் செலுத்தி  அதனைத்தொடர்ந்து திருப்புவனம், மானாமதுரை வட்டாரத்தில் உள்ள மேலராங்கியம், பிரமனூர், லாடனேந்தல், மழவராயனேந்தல் ஆகிய ஊராட்சிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயத்திற்கு தேவைப்படும் உரம், ஈடுபொருட்கள் மற்றும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய விவசாய பயிர்க்கடன் போன்ற திட்டங்கள்  அனைத்து கிடைக்கும் வகையில் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும்,  நடப்பாண்டில் நெல், சிறுதானியங்கள், எண்ணெய்வித்துகள், கரும்பு, தென்னை, பயறுவகை பயிர்கள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 92,000 ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பயிர்களுக்கு தேவைப்படும் யூரியா, பொட்டாஷ், டிஏபி, காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் இதுவரை யூரியா 11350 மெட்ரிக்டன், டிஏபி2900 மெட்ரிக்டன், பொட்டாஷ் 820மெட்ரிக்டன், காம்ப்ளக்ஸ் 5900 மெட்ரிக்டன் ஏப்ரல் முதல் இதுவரை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 


இம்மாதத்திற்கு யூரியா 4600 மெட்ரிக்டன் ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 1200  மெட்ரிக்டன் வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் யூரியா1949மெட்ரிக்டன், டிஏபி438மெட்ரிக்டன், பொட்டாஷ் 484 மெட்ரிக்டன், காம்ப்ளக்ஸ் 2130 மெட்ரிக்டன் உரங்கள் இருப்பு உள்ளது. மேலும்,சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் 125; தொடக்க  வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 2022-223 ஆம் ஆண்டிற்கு ரூ.200.00 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 10.11.2022 வரை 7720 விவசாயிகளுக்கு ரூ.42.22 கோடி அளவிற்கு கேசிசி பயிர்க்கடனும் 1246 விவசாயிகளுக்கு ரூ.12.06 கோடி அளவிற்கு கேசிசி விவசாயநகைக்கடன்களும் ஆக மொத்தம் 8966 நபர்களுக்கு ரூ.54.28 கோடி அளவிற்கு கேசிசி பயிர்க்கடன்களும், மேலும் 10552 நபர்களுக்கு கேசிசி கால்நடை பராமரிப்பு ரூ.39.04 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 


ஆக மொத்தம் 19518 நபர்களுக்கு கேசிசி கடன் ரூ.93.32 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், 6246 புதிய உறுப்பினர்களுக்கு கேசிசி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. ரூ.24.07 கோடி அளவிற்கு கேசிசி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே ,விவசாயிகள் தங்களுக்கு தேவைப்படும் உரங்கள் மற்றும் விவசாய கடன்கள்  பெற்று; பயன்பெற வேண்டுமென,  மாவட்ட ஆட்சித்தலைவா கேட்டுக் கொண்டுள்ளார். 


இந்நிகழ்ச்சியில், இணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை ஜீனு, துணைப்பதிவாளர் கூட்டுறவுத்துறை பாலச்சந்திரன், மத்திய கூட்டுவுவங்கி பொதுமேலாளர்  பாலராஜா, திருப்புவனம் வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரமகாலிங்கம் வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுபாடு) பரமேஸ்வரன், வேளாண்மை அலுவலர் கலைவாணி, துணைவேளாண்மை அலுவலர் முனியசாமி, உதவிவேளாண்மை அலுவலர் ராஜா, ரகுபதி, கரும்புசெல்வம், கூட்டுறவுசங்க செயலாளர்கள் விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad