டோல்கேட்டில் அரசு பேருந்தில் பாஸ்டாக்கில் பணம் இல்லை என அரசுப் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 9 October 2022

டோல்கேட்டில் அரசு பேருந்தில் பாஸ்டாக்கில் பணம் இல்லை என அரசுப் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மதுரையை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் வந்தபோது மின்னணு முறையில் கட்டணம் செலுத்த பாஸ்கேட்டில் பணம் இல்லை என அந்த அரசுப் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டது. 


அந்தப் பேருந்து சுங்கச் சாவடியைத் தாண்ட அனுமதிக்கப்படவில்லை. பாஸ்டேக் உள்ள ஒரு பேருந்திற்குப் பதிலாக அது பழுதானதால் இந்தப் பேருந்து விடப்பட்டுள்ளது. இதற்கு பாஸ்டேக் கட்டணம் முடிந்திருப்பது பற்றி தெரியாது என பேருந்தின் ஓட்டுநரும், நடத்துநரும் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர், பணிமனை மேலாளருக்குத் தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து, போன் மூலம் டோல்கேட் கட்டணம் செலுத்திய பின்புதான் பேருந்து அனுமதிக்கப்பட்டது.


சுங்கச்சாவடியிலேயே பேருந்து ஒரு மணிநேரமாகக் காத்திருந்ததால் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். சுங்கச்சாவடியைக் கடக்க போதிய கட்டணம் இருக்கிறதா எனப் பார்க்காமலேயே பேருந்தை ஓட்டியதாக அவர்கள் கோபம் அடைந்தனர். அரசுப் பேருந்து சுங்கச்சாவடியில் காக்கவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad