அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக ள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 19 October 2022

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக ள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.

அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் சார்பாக இந்திய சுதந்திர தின அமுதப் பெருவிழா மற்றும் கல்லூரியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு காரைக்குடி வட்டார பள்ளி மாணாக்கர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் ஒன்பதுக்கும் மேற்பட்ட  பள்ளிகளில் இருந்து 35 மாணவர்கள் பங்கேற்றனர். 


6 முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9  மற்றும்10 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன. இந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் வேலாயுத ராஜா வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து யூத் ரெட் கல்லூரிக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்தும், இந்திய சுதந்திரத்தை பற்றியும், வள்ளல் அழகப்பரின் கொடைப் பண்புகள் பற்றியும் விளக்கிக் கூறினார். 


பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரியின் மேனாள் முதல்வர்  சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார். தலைவர்கள் அரும்பாடு பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டும் என்றும், வள்ளல் அழகப்பரின் முயற்சியால் உருவான இந்த அழகப்பா கல்லூரி மென்மேலும் வளர வேண்டும் என்றும், உலகிலேயே 10 கோடி இளைஞர்களை கொண்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பு கொரோனா காலத்தில் சிறப்பான பணிகள் குறித்தும் அவர் விளக்கிப் பேசினார். யூத் ரெட் கிராஸ் மாணவப் பிரதிநிதி ஜீவகப்பிரியா நன்றி கூறினார். இதில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad