அமமுகவினருக்கு முக்கிய அழைப்பு விடுத்த டிடிவி தினகரன். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 October 2022

அமமுகவினருக்கு முக்கிய அழைப்பு விடுத்த டிடிவி தினகரன்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாள டிடிவி தினகரன் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் குரு பூஜை விழாவில் பங்கேற்கவுள்ளார்.

இதுகுறித்து அமமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிமை விலங்கொடித்து, தாய்மண் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க, சிவகங்கை சீமையில் சீறி எழுந்து வீரப்போர் புரிந்த தியாக தீபங்களாம், மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு நாளான 24.10.2022 திங்கள் கிழமையன்று காலை 10 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுசகோதரர்கள் நினைவிடத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் மரியாதை செலுத்த இருக்கிறார்கள்.

 

இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், வட்ட/வார்டு, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad