அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் "கோடி கொடுத்த கொடைஞனும், தேடிக்கொடுத்த அறிஞனும்" என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 12 October 2022

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் "கோடி கொடுத்த கொடைஞனும், தேடிக்கொடுத்த அறிஞனும்" என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம்.

அழகப்பா அரசு கலைக்கல்லூரியின் 75 ஆம் ஆண்டு பவள விழாவினை முன்னிட்டுக் காரைக்குடி  அழகப்பா அரசு கலைக்கல்லூரி த் தமிழ்த்துறையும் சென்னை ந. சுப்புரெட்டியார் 100 அறக்கட்டளையும் இணைந்து நடத்திய  கோடி கொடுத்த கொடைஞனும் தேடிக்கொடுத்த அறிஞனும் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தின்  இரண்டாம் நாள் அமர்வுகளும்  நிறைவு விழாவும் 11.10.2022 அன்று நடைபெற்றது.


கருத்தரங்க அமர்வில் பேராசிரியர்கள் கலந்து கொண்டு தங்கள் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். நிறைவு விழாவின் வரவேற்புரையினை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ப.சு. செல்வமீனா வழங்கினார். தலைமையுரையினை பொறுப்பு முதல்வர் ம.துரை ஆற்றினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறையின் மேனாள் பேராசிரியர் வீ.ரேணுகாதேவி கருத்தரங்க மதிப்புரை வழங்கினார். 


தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் மோ.கோ. கோவைமணி அவர்கள் தனது சிறப்புரையில் வள்ளல் அழகப்பரின் கொடைத்திறனையும் ந. சுப்புரெட்டியாரின் ஆராய்ச்சிப் புலமையையும் வியந்து பாராட்டினார். பாரதவாணி இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தின் அறிஞர் க. பசும்பொன் தனது நிறைவுரையில் வள்ளல் அழகப்பரின் சிறப்புகளையும் ந. சுப்புரெட்டியாரின் தமிழ்ப்புலமையையும் சிறப்புடன் எடுத்துரைத்தார்.


தமிழ்த்துறை இணைப்பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான முனைவர் மா. சிதம்பரம் ந. சுப்புரெட்டியார் அறக்கட்டளையின் நிறுவனர் சு. இராமலிங்கம் அவர்களுக்கும் கட்டுரைவழங்கிய பேராசிரியர்களுக்கும் கருத்தரங்கு செம்மையாக நடைபெற பெரும் ஒத்துழைப்பு நல்கிய முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். 


இக்கருத்தரங்கில் மலேயா,சிங்கப்பூர், ஆஸ்திரேலிய உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்தும் தமிழறிஞர்கள் கட்டுரைகளை வழங்கிச் சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad