நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு: எஸ்பி உத்தரவு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 22 October 2022

நாளை முதல் அக்டோபர் 31-ம் தேதி வரை 144 தடை உத்தரவு: எஸ்பி உத்தரவு.

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை ஆணையர் செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் தேவர் நினைவு தினத்தை ஒட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருது பாண்டியர்கள் மற்றும் தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் நாளை முதல் அதாவது அக்டோபர் 23 முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


எனவே இந்த நாட்களில் முன் அனுமதி இன்றி மற்ற மாவட்ட மக்கள் சிவகங்கை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. 

No comments:

Post a Comment

Post Top Ad