நகை பணத்திற்காக கொலை, போலீசார் விசாரணை. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 July 2022

நகை பணத்திற்காக கொலை, போலீசார் விசாரணை.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டிதேவி (வயது 40). இவர் கணவரை பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.


சம்பவத்தன்று பாண்டிதேவியின் தந்தை, மதுரை அய்யர்பங்களா பகுதியில் இறந்ததாக அவருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பாண்டிதேவி தனது வீட்டை பூட்டி விட்டு மதுரைக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து உள்ளே இருந்த தோடு, காசுமணி, மோதிரம் என மொத்தம் 5 பவுன் நகைகளையும், வெள்ளி கொலுசு மற்றும் ரூ. 20 ஆயிரம் ஆகியவற்றையும் திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.


இதற்கிடையே வீட்டிற்கு வந்த பாண்டிதேவி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் மாயமாகி இருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


பின்னர் பாண்டிதேவி இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பூவந்தி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில்பூவந்தி காவல் நிலைய காவல் சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணம் திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad