மானாமதுரை அருகே கிடாய் முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 July 2022

மானாமதுரை அருகே கிடாய் முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அ. விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு கிடாய் முட்டுச் சண்டை போட்டி நடைபெற்றது இதை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசி தொடக்கி வைத்தார். 


பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன. போட்டிக்கான களத்தில் நேருக்கு நேர் கிடாய்கள் மோதி சண்டையிட்டன. அதிகமுறை முட்டிக்கொண்ட கிடாய்களுக்கு வெற்றி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதில் களமாடிய பல கிடாய்கள் போட்டியிலிருந்து ஓட்டம் பிடித்தன

.

களத்தில் கம்பீரமாக நின்று முட்டிய கிடாய்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளர்களுக்கு விழாக்குழு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. 

No comments:

Post a Comment

Post Top Ad