நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழி குஞ்சு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 10 July 2022

நான்கு கால்களுடன் பிறந்த அதிசய கோழி குஞ்சு ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தில் நான்கு கால்களுடன் கோழி குஞ்சு பொறித்துள்ளது இப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


சாலைகிராமத்தைச் சேர்ந்த கவிதா மனோகரன் தம்பதியினர் வீட்டில்10 வருடத்திற்கு மேலாக கோழிகளை வளர்த்து வருகின்றனர். அதில் ஒரு கோழியை 17 முட்டைகளுடன் அடை காக்க வைத்தனர். இதில் 17 முட்டைகளும் குஞ்சு பொறித்து, கோழி குஞ்சுகள் வெளியே வந்துள்ளது.


அதில் ஒரு கோழி குஞ்சிற்கு மட்டும் நான்கு கால்கள் உள்ளது. சாதாரணமாக கோழி உள்ளிட்ட பறவை இனங்களுக்கு இரு கால்கள் மட்டுமே உள்ள நிலையில் நான்கு கால்களுடன் பிறந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நான்கு கால்களுடன் தட்டுத்தடுமாறி கோழி குஞ்சு நடைபயின்று வருவதை அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad