கீழடியில் 2 அடி நீளத்திற்கு செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிப்பு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 4 July 2022

கீழடியில் 2 அடி நீளத்திற்கு செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் மத்திய- மாநில அரசுகள் சார்பில் பல்வேறு கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. 


தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் 7 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு மேற்கொண்டதில் கண்ணாடி பாசிமணிகள், கண்ணாடி வளையல்கள், சுடுமண் மணிகள், காதணிகள், சங்கு வளையல்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பகடைக்காய்கள், சுடுமண்ணால் செய்த சில்லு வட்டுக்கள், இரும்பினால் செய்யப்பட்ட ஆணிகள், பழங்கால பெரிய பானைகள், சேதமடைந்த செங்கல் சுவர் உள்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த நிலையில் கீழடியில் 8-வது குழி தோண்டி அகழாய்வு பணி நடந்தது. இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 கலரில் சிறிய பானையின் அடிப்பகுதி போல் தென்பட்டது. தொடர்ந்து தோண்டும் போது 2 அடி நீளத்திற்கு செங்கல் கட்டுமான சுவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவரில் செங்கல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைத்து கட்டியுள்ளனர்.


குழியின் ஓரப்பகுதியில் இந்த சுவர் தென்பட்டதால் அருகில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணிகள் செய்யும்போது இதன் தொடர்ச்சி தெரியவரும். மேலும் ஆழமாக குழியை தோண்டி அகழாய்வு செய்யும் போது இதன் உயரம் குறித்தும் சரியாக கணக்கிட முடியும். என தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad