சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரியில் முதுநிலை மருத்துவ படிப்பில் இக்கல்வி ஆண்டு முதல் பொது மருத்துவம், மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை, குழந்தைகள் நல பிரிவுகளில் 21 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.கடந்த 8 மாதமாக உயர்கல்வி படிக்கும் இவர்களுக்கு மன அழுத்தம், பணிச்சுமையால் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. இவர்களுக்கு 24 மணி நேர பணி வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய கவுன்சிலுக்கு புகார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சு, வார்டு சுகாதார ஊழியர்கள் கூட எட்டு மணி நேர ஷிப்ட் படி பணி செய்கின்றனர்.அதுபோன்று முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் 8 மணி நேர ஷிப்ட் படி பணி வழங்க வேண்டும். இம்மாணவர்கள் வருகைக்கு பின் அனைத்து துறையில் உள்ள துறை தலைவர், உதவி பேராசிரியர்கள் பணிச்சுமையை தங்கள் மீது சுமத்துகின்றனர்.
மேலும் பணிநேரத்தில் சொந்த கிளினிக்கிற்கு சென்று விடுகின்றனர். எங்களின் குறைகளை நிவர்த்தி செய்ய குறைதீர்க்கும் கவுன்சிலை ஏற்படுத்த வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சில், மருத்துவ கல்வி இயக்குனர், சிவகங்கை கலெக்டருக்கு அனுப்பிய புகாரில் தெரிவித்துள்ளனர். புகார் செய்தால் உடனடி தீர்வு, டீன் ரேவதி கூறியதாவது: இந்த புகாரை தாங்கள் அனுப்பவில்லை என முதுநிலை மருத்துவ மாணவர்கள் எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.இருப்பினும் என்னிடம் நேரடியாக வந்து கூறி குறைகளை தவிர்க்கலாம்.
ஒவ்வொரு துறையிலும் குறைதீர் கவுன்சில் குழு நியமித்துள்ளோம். அவர்களிடம் புகாரை தெரிவித்தால் உடனே நிவர்த்தி செய்யப்படும், என்றார்.
No comments:
Post a Comment