மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில்தங்கத்தை உருக்கும் பணிதொடங்கியது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 June 2022

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில்தங்கத்தை உருக்கும் பணிதொடங்கியது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை உருக்கும் பணிதொடங்கியது பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று. இங்குள்ள ஒன்பது உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் பணம்,


தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகள் இரு மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும், தங்க பொருட்கள் மட்டும் பாதுகாப்பு பெட்டகத்தில் சேமித்து வைக்கப்பட்டன. 2015ல் தங்க தேர் செய்யப்பட்ட பின் மீதமான தங்கத்துடன் இதுவரை 14கிலோ 70கிராம் தங்க நகைகள் இருப்பில் இருந்தன. 


அவற்றை ஓய்வு பெற்ற நீதிபதி மாலா தலைமையில் சிவகங்கை அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமார், துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு) சிவராஜ்குமார், மடப்புரம் செயல் அலுவலர் வில்வமூர்த்தி, கணக்காளர் புஷ்பராஜ், அறங்காவலர் குழு தலைவர் பழனியப்பன், உறுப்பினர்கள் பாஸ்கரன், சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் அவற்றை உருக்கும் பணி தொடங்கியுள்ளது.


மூன்று நாட்கள் நடைபெறும் பணிக்கு பின் உருக்கப்பட்ட தங்கநகைகள் கட்டிகளாக மாற்றப்பட்டு மும்பையில் உள்ள ஸ்டேட் வங்கி கருவூலகத்திற்கு அனுப்ப பட உள்ளது. காணிக்கை தங்க நகைகள் உருக்கப்படுவதை ஒட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

No comments:

Post a Comment

Post Top Ad