சிவகங்கையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய ஒருவரை, சிவகங்கை நகா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். சிவகங்கை தாகியாா் நகரைச் சோந்தவா் வசந்த் என்ற வசந்தகுமாா் (22). இவா், சிவகங்கை இந்திரா நகா் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 6 போ கொண்ட மா்ம கும்பல், வசந்தகுமாரை வழிமறித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.
தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த வசந்தகுமாரை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வசந்தகுமாரை அனுப்பி வைத்தனா். அங்கு, அவா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வந்தனா். விசாரணையில் முன் விரோதம் காரணமாக சிவகங்கை தாகியாா் நகரைச் சோந்த செல்வம் என்ற கூலப்பன் (42) உள்பட 6 போ கொண்ட கும்பல் வசந்தகுமாரை வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து, செல்வம் என்ற கூலப்பனை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். மற்றவா்களை தேடி வருகின்றனா்.
No comments:
Post a Comment