கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 17 May 2022

கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முறைகேடாக ரூ.50 லஞ்சம் பெற்றுக்கொண்டு சீன நாட்டினருக்கு விசா வாங்கி கொடுத்த விவகாரத்தில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை இன்று (மே.17) நடத்தி வருகின்றனர், சிவகங்கை எம்.பி.கார்த்தி சிதம்பரம் மீதான வழக்கு தொடர்பாக சிபிஐ சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.


கடந்த 2010- 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தின் போது கார்த்தி சிதம்பரம் நடத்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து முறைகேடான வழிகளில் பணம் கிடைத்தது தொடர்பாக சிபிஐ சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் சொந்த தொகுதியான சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அவரது இல்லம் மற்றும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் சிபிஐ அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad