அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டக் குழுவின் சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 October 2024

அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டக் குழுவின் சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு


 அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப் பணித்திட்டக் குழுவின் சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி‌யும், தூய்மைப் பணியும் நடைபெற்றன. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நான்கு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 26.09.2024 அன்று அழகப்பா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக மாணவ மாணவிகள் தூய்மை இந்தியா குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டு,  கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தனர்.

 

27.09.2024 அன்று மாணவர்களுக்கு நாட்டையும் வீட்டையும் எவ்வாறு தூய்மையாக வைத்துக் கொள்வது என்பதை குறித்த கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தனர். 30.09.2024 அன்று நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் மை பாரத் (MY BHARAT) என்ற பதாகையை கையில் ஏந்தி தூய்மையை குறித்த உறுதி மொழியை சீருடை அணிந்து உறுதிமொழி எடுத்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நாட்டையும் வீட்டையும் எவ்வாறு  சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

 

01.10.2024 அன்று பசுமைப் புரட்சியை வலியுறுத்தி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.  கல்லூரியின் பொறுப்பு முதல்வர் வரலாற்று துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதனைத் தொடர்ந்து அழகப்பா பல்கலைக்கழக குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள முருகன் கோவில் வளாகத்தை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி,  முனைவர் தெய்வமணி, முனைவர் லட்சுமணக்குமார்,  முனைவர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad