மானாமதுரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான நேர்முருப்பந்தலை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 8 May 2024

மானாமதுரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான நேர்முருப்பந்தலை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர்.

 


மானாமதுரை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கான நேர்முருப்பந்தலை திறந்து வைத்த கூட்டுறவுத்துறை அமைச்சர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பாக மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கான நீர் மோர் பந்தலை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் திறந்து வைத்து, வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நீர், மோர், சர்பத் மற்றும் இளநீர் ஆகியவற்றை வழங்கினார். முன்னதாக மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கான நீர் மோர் பந்தலை அமைச்சர் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் த. சேங்கைமாறன், நகர் கழகச் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாமணி, மானாமதுரை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய  பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நகர மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தில்லை புவியரசு ஆகியோரும்.


மேலும் திருப்புவனத்தை சேர்ந்த கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், நகர செயலாளர் நாகூர்கனி, ஒன்றிய குழு துணை தலைவர் அழ. மூர்த்தி, பேரூராட்சி துணை தலைவர் ரகமத்துல்லாகான், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் திரு.சுப்பையா ராமு, மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் தேவதாஸ், கிழக்கு ஒன்றிய இளைஞர் அணி அறிவுக்கரசு, நகர் இளைஞர் அணி கண்ணன் டி. ஆர். சேகர், திருப்புவனம் பிரபு, கழகத்தின் அனைத்து அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, கிளை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad