சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் ஆய்வாளரும் சமூக அக்கறை கொண்ட சமூக செயல்பாட்டாளருமான ஆவடிவேல் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்., அவரின் துரித நடவடிக்கைகள் காரணமாக தற்போது காளையார் கோவிலில் குற்ற சம்பவங்கள் குறைந்து கொண்டு இருக்கின்றன., ரவுடிசம், மது போதை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அடியோடு ஒழிக்கப்பட்டு வருகிறது.,
கடந்த சில மாதங்களுக்கு முன் காளையார் கோவிலை சுற்றியுள்ள கிராமங்களில் கொலை,கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தேறின., அதனால் பொதுமக்கள் வியாபாரிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆகியோரிடையே அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது., அவ்வாறு பரபரப்பான கொலை சம்பவங்களும் நடந்தேறியது என்ற போதும் குற்றங்களின் மீது உடனடியாக அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு ஆவடி வேல் தலைமையிலான காவல்துறை தீர்வு கண்டது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.,
காளையார் கோவில் காவல் நிலைய காவல் ஆய்வாளராக ஆடிவெல் பொறுப்பேற்ற பிறகு குற்ற சம்பவங்கள் குறைந்து மக்கள் மனநிம்மதியுடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து நிம்மதிப் பெருமூச்சு விட்ட இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஆடி வேலை பணியிட மாற்றம் செய்யப் போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளதால் மக்கள் மனதில் மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது., எனவே காவல் ஆய்வாளர் ஆடி வேலை பணியிட மாற்றம் செய்யாமல் இன்னும் ஒரு வருடமாவது காளையார்கோவில் காவல் நிலையத்தில் பணிபுரிய வேண்டும்., என்பது காளையார்கோவில் சுற்று வட்டார பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment