சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கழனிவாசல் இரண்டாவது வார்டு முனீஸ்வரன் கோவில் தெரு ஒன்னாவது வீதியில் உள்ள பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட கசிவின் காரணமாக துர்நாற்றம் வீசி வந்த நிலையில்.,அப்பகுதி மக்கள் இரண்டாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சிவாஜியிடம் புகார் அளித்திருந்தனர் இந்த புகாரின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகத்தின் ஆணைப்படி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டனர், இதில் பாதாள சாக்கடையின் குழாய் இணைப்புகளின் மேல் மூடியை நெடுஞ்சாலைத்துறையினர் புதிய சாலை அமைக்கும் பொழுது முழுவதுமாக மூடிவிட்டதாக கூறப்படுகிறது., மேலும் பாதாள சாக்கடை மேல் மூடி இருந்ததற்கான எந்தவித அடையாளமும் அமைக்கப்படாமலும் இருந்துள்ளது., இந்த நிலையில் வேறு வழியின்றி நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் சாலையை உடைத்து மிகுந்த சிரமப்பட்டு பாதாள சாக்கடை மூடிகளை கண்டறிந்து பின்னர் அடைப்பை சரி செய்தனர்., இதனைத் தொடர்ந்து புகார் அளித்த மக்களுக்கு அந்தப் பிரச்சினை துரித வேகத்தில் சரி செய்யப்பட்டிருந்தாலும் கூட., இதனை சரி செய்யும் முயற்சியில் சாலை சேதப்படுத்தப்பட்டதை நெடுஞ்சாலைத்துறை எவ்வித மறு சீரமைப்பும் செய்யாமல் அப்படியே விட்டுள்ளதால் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாக புகார் எழுந்துள்ளது., மேலும் சாலையின் நடுவே குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது வழித்தடத்தை விட்டு எதிர் திசையில் ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குவதால் பெரிய விபத்துக்கள் நேரிடும் அபாயம் உள்ளது எனவே நெடுஞ்சாலைத்துறை இதனை கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டுள்ள நான்கு குழிகளையும் சீரமைக்க வேண்டும் என்பது அப்பகுதியின் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment