சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகராட்சி 2 வது வார்டு சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் அமைந்துள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை சிவகங்கை நகர் மன்ற தலைவர் சி. எம். துரை ஆனந்த் அவர்கள் தனது சொந்த நிதியிலிருந்து அமைத்து சிவகங்கை மாவட்ட காவல் துணை சூப்பிரண்டு அவர்களுடன் இணைந்து பொதுப் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் மன்ற உறுப்பினர்கள், காவல்துறை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், நகராட்சி அலுவலர்கள், 2 வது வார்டு திமுக நிர்வாகிகள், சிவகங்கை மாவட்ட திமுகவை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment