சிவகங்கையில் மணிப்பூர் வன்கொடுமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 July 2023

சிவகங்கையில் மணிப்பூர் வன்கொடுமைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பில்  மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்தும் மெழுகுவத்தியை கையில் ஏந்தி மாவட்டத் தலைவர் ப. சத்தியமூர்த்தி அவர்களின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட பொருளாளர் திரு எஸ்.எம். பழனியப்பன், கீழச்சீவல்பட்டி நகர் காங்கிரஸ் தலைவர் திரு அழகு மணிகண்டன், கல்லல் ஒன்றிய குழு துணை தலைவர் திரு நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர் திரு இருதயராஜ், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் திரு மருது பாண்டியன், மாவட்ட காங்கிரஸ் இணைச் செயலாளர் நெற்குப்பை திரு சுப்பிரமணியன், மாவட்டத்துணை தலைவர் திரு பாபா அமீர் பாதுஷா, திருப்பத்தூர் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் திரு SMPL. சேது மெய்யப்பன், மாணவர் அணி திரு சௌமியன், சட்டமன்றத் தொகுதி துணைத் தலைவர் திரு சேதுபதி , திருப்பத்தூர் இளைஞர் காங்கிரஸ் நகர தலைவர் வழக்கறிஞர் திரு முகமது ஹரிப், இளைஞர் காங்கிரஸ் வட்டார தலைவர் திரு சுரேந்திரன், பிள்ளையார்பட்டி ஊராட்சி தலைவர் திரு. சூரிய பிரகாஷ், வைரவன்பட்டி ஊராட்சித் தலைவர் திரு. பரத் சட்டமன்றத் தொகுதி பொதுச்செயலாளர்கள் திரு கௌதம், திரு மணிகண்டன், திரு அப்துல்லா, திரு பாலா மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் பெருமளவில் ஆகியோர் கலந்து கொண்டனர்.  


- செய்தியாளர் லிவிங்ஸ்டன்

No comments:

Post a Comment

Post Top Ad