சிவகங்கை மாவட்டத்தில், அக்னிவீர்வாயு ஆள் சேர்ப்பு முகாம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

சிவகங்கை மாவட்டத்தில், அக்னிவீர்வாயு ஆள் சேர்ப்பு முகாம்.


இந்திய விமானப்படையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு  ஆட்சேர்ப்பு தேர்விற்கு, இணையதளம் வாயிலாக விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற 31.03.2023-க்குள் விண்ணப்பிக்கலாம்  என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தகவல் தெரிவித்தார்.


இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் அக்னிவீர்வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்கு அறிவிப்பு 17.03.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31.03.2023 ஆகும். இத்தேர்வு 20.05.2023 முதல் ஆன்லைன் வாயிலாக நடைபெற உள்ளது. 

பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு நிகரான கல்வித்தகுதி உடைய திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 26.12.2002 அன்று அல்லது அதற்குப்பின் பிறந்தவர்கள் மற்றும் 26.06.2006 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். உடல்தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 செ.மீ உயரமும், பெண்கள் 152 செ.மீ உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத்தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகிய நிலைகளை உடையது. 


மேலும், விபரங்களுக்கு http://www.airmenselection.cdac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்து கொண்டு, விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 31.03.2023-க்குள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad