சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாஜக நகரத் துணைத் தலைவராக இருப்பவர் ஜோதி சண்முகம் இவர் தனது இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூர் சென்று விட்டு காரைக்குடி திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது வைரவன்பட்டி அருகே எதிரே வந்த சரக்கு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாஜக பிரமுகர் ஜோதி சண்முகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து குன்றக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment