மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: நலத்திட்ட உதவி.


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் 17 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.2.40 இலட்சம் மதிப்பீட்டில் வேலை உத்தரவிற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வழங்கினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது.


மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 312 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, அறிவுறுத்தினார்.


இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் காரைக்குடி வட்டத்தைச் சார்ந்த 7 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை உதவித்தொகைக்கான ஆணைகளையும், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9,558 மதிப்பீட்டிற்கான மானிய விலையில் ஈடுபொருட்களையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.25,610 மதிப்பீட்டிற்கான மானிய விலையில் பல்வேறு விதைகள் மற்றும் பழவகை கன்றுகளையும், பால்வளத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.14,000 வீதம் மொத்தம் மதிப்பீட்டில் கிசான் கடன் திட்டத்தின்கீழ் கடனுதவிகளையும் மற்றும் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்லூரணி, பூவந்தி, பிரமனூர் ஆகிய 3 ஊராட்சிகளை சார்ந்த  3 பயனாளிகளுக்கு தலா ரூ.2,40,000 மதிப்பீட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின்கீழ் வேலை உத்தரவிற்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர்  ப.மதுசூதன் ரெட்டி,  வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கே.கே.கோவிந்தன் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad