சிவகங்கை மாவட்டம் கண்டனூர் இந்திரா காலனியை சேர்ந்த கருப்பையா மகன் காளியப்பன் இவரது மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்து வந்த காளியப்பன் குடிக்கு அடிமையாகி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார்.
காளியப்பனை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து அங்கு சிகிச்சை பலனின்றி காளியப்பன் உயிரிழந்தார். இது குறித்து அவரது சங்கர் சாக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

No comments:
Post a Comment